இன்ஸ்டாகிராமில் பெண்ணை ஆபாசமாக சித்தரித்து வீடியோ: புகைப்படத்தை வைத்து போலி கணக்கு துவங்கியவர் கைது
கோவையை சேர்ந்த ஒரு பெண்ணின் பெயர் மற்றும் புகைப்படத்தை வைத்து சமூக வலைதளத்தில் போலி கணக்கு ஆரம்பித்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணின் பெயர் மற்றும் புகைப்படத்தை வைத்து சமூக வலைதளத்தில் (Instagram) போலியான கணக்கை துவங்கி,புகைப்படத்தை வைத்து ஆபாசமாக சித்தரித்து வீடியோவை அனுப்பியுள்ளார்.
அந்த பெண்ணை மிரட்டியதோடு, அவரைவீடியோ காலில் வரும்படி தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். இதையடுத்து,பாதிக்கப்பட்ட பெண்NCRB -ல் புகார் பதிவு செய்துள்ளார். இதையடுத்து, அந்த புகார் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, சம்பவம் குறித்து சைபர் கிரைம் ஆய்வாளர் ஜெயதேவி வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை கொண்டதில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தகார்த்திக் (25) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர், அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Leave a Reply