கோவையில் நண்பர்களுடன் மது குடிக்க சென்ற வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து..!

கோவை மாவட்டம் காரமடை தோலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார். இவர் தனது நண்பர்களுடன் விளங்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிவிட்டு அருகில் இருந்த பாரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த பத்ரசாமி என்பவர் அங்கு வந்தார். அவர் திடீரென பீர் பாட்டிலை எடுத்து மகேஷ் குமார் தலையில் ஓங்கி அடித்தார். இதை கண்டு அங்கிருந்தவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் இருவரும் சாலையில் வந்து தகராறு ஈடுபட்டனர். அப்போது பத்ரசாமி மீண்டும் கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து மகேஷ் குமாாரை தகாத வார்த்தைகள் திட்டி குத்தினார். இதில் அவருக்கு ரத்தம் கொட்டியது. இதனை கண்ட அவரது நண்பர்கள் அவரை மீட்டு தாயனூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.