மின் கம்பத்தில் ஏறி அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது..!

கோவை அருகே உள்ள துடியலூர் துணை மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருபவர். ஆல்பர்ட் ஜோசப் ராஜ் (வயது 55)நேற்று இவர் பணியில் இருந்த போது சீரநாயக்கன்பாளையம் ராதாகிருஷ்ணன் வீதியில் உள்ள உயர் அழுத்த மின்கம்பத்தில் ஒருவர் ஏறி நிற்பதாக தகவல் வந்தது. இதையடுத்து ஆல்பர்ட் ஜோசப் ராஜ் அங்கு சென்றார் .அவரை கீழே இறங்குமாறு கூறினார். அப்போது அந்த ஆசாமி அவரை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். .பின்னர் சிறிது நேரம் கழித்துஅந்த ஆசாமி கீழே இறங்கி வந்தார்.இதுகுறித்து ஆல்பர்ட் ஜோசப் ராஜ் ஆர். எஸ். புரம். போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர் .விசாரணையில் அவர்வேடப்பட்டி பக்கம் உள்ள அஞ்சனூரைச் சேர்ந்த ராஜ்குமார் ( வயது 28) என்பது தெரிய வந்தது. இவர் மீது கொலை மிரட்டல் அரசு ஊழியர்களை பணி செய்து தடுத்தல் .உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.