தூக்கு போட்டு கோவை ஐ.டி. ஊழியர் தற்கொலை..

கோவை ரத்தினபுரி,சங்கனூர் பள்ளம், சாஸ்திரி நகரை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் பிரசாத் ( வயது 31 )ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் திருமணம் முடிந்து மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது மனைவி கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழாவுக்காக தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் நேற்று பிரசாத் அவரது வீட்டில் சமையல் அறையில் விட்டதில் துணியை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து இவரது தந்தை கருப்பையா ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. மேலும் விசாரணை நடந்து வருகிறது.