நீலகிரி பந்தலூர் அருகே இரண்டு பேரைக் கொன்ற சிறுத்தை பிடிக்கப்பட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் விடப்பட்டது…

நீலகிரி மாவட்ட கூடலூர் பகுதியில் உள்ள பந்தலுார் கிராமங்களில் கடந்த இரண்டு மாதங்களாக,
சிறுத்தையின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வளர்ப்பு நாய்கள், ஆடுகள் மற்றும் மாடுகளை வேட்டையாடி சென்றுள்ளது, இதனை பலமுறை வனத்துறைக்கு தெரிவித்தும் நடவடிக்கை தாமதமாக செயல்பட்டார்கள் என்று பகுதி மக்கள் கூறுகின்றனர், கடந்த மாதம் சரிதா என்ற பழங்குடியின பெண் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மூன்று பெண்களையும்
சிறுத்தை தாக்கியது. அதில் சரிதா பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்., சிறுத்தையின் அட்டகாசம் பகுதி மக்களை மிகுந்த அச்சத்திற்கு தள்ளியதோடு மக்கள் கோபத்துடன் வனத்துறை அதிகாரிகளிடம் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர், வனத்துறையின் நடவடிக்கையால் ஐந்து இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டன, மற்றும் 30 கேமராக்கள் பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டுபிடிக்க வனத்துறையினர் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வந்தனர், மீண்டும் சிறுத்தை சேவியர் மட்டும் என்னுமிடத்தில் வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது பெண் குழந்தையை சிறுத்தை தாக்கியது பகுதியில் இருந்த மக்கள் சத்தமிட்டதால் சிறுத்தை ஓடியது, அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் குழந்தை உயிர் தப்பியது, இச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் கூடலூர் பல பகுதி மக்களை கோபத்தையும் ஆத்திரத்தையும்ஏற்படுத்தியது, வனத்துறையின் மத்தன போக்கால் சிறுத்தை பிடிப்படாமல் உள்ளது என்று பகுதி மக்களிடம் சந்தேகம் எழும்பியது,இதனால்
சிறுத்தையை சுட்டு பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் , மயக்க ஊசி செலுத்தி சிறுத்தை பிடிக்க வனத்துறைக்கு உத்தரவு அளிக்கப்பட்டது வனத்துறையினர் பகுதி முழுவதும் சிறுத்தையை தேடி வரும் நிலையில்,நேற்று மாலைே மேங்கோரேஞ்ச் குழந்தைகள் காப்பக அங்கன்வாடி மையத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்தை சார்ந்த சிவசங்கர் கிர்வார் என்பவரின் மனைவி மூன்று வயது மகளை தேயிலை தோட்டம் வழியாக அழைத்து வந்தபோது, தேயிலை தோட்டத்தில் மறைந்திருந்து சிறுத்தை திடீரென்று மூன்று வயது சிறுமியின் மீது பாய்ந்து தாக்கியது, உடன் வந்த தாய் போராடியும் குழந்தையை சிறுத்தை இழுத்து சென்றது, குழந்தையை மீட்க முடியாமல் பரிதவித்த தாயை சத்தமிட்டதால்
ஊர் மக்கள் உடனடியாக வந்து தேயிலை தோட்டம் முழுவதும் தேடினார்கள் ஆனால் பழமையில் தூரத்தில் குழந்தை இரத்த வெள்ளத்தில் கண்டுபிடித்தனர், அங்கு இருந்தவர்கள் உடனடியாக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர், மருத்துவ பரிசோதனையில் குழந்தை ஏற்கனவே இறந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டது, குழந்தை பலியான சம்பவத்தால் கூடலூர் மக்கள் மற்றும் தேயிலை தோட்ட வடமாநிலத்தவர்கள் இணைந்து போராட்டத்தை தீவிரப்படுத்தினர், தமிழ்நாடு கேரளா கர்நாடகா மாநிலங்கள் செல்லும் சாலைகள் முற்றிலும் பாதிக்கப்பட, இதன் காரணமாக மயக்க ஊசி செலுத்தி சிறுத்தை பிடிக்க வனத்துறையினருக்கு உத்தரவு அளிக்கப்பட்டது, 90க்கும் மேற்பட்ட வனத்துறையினர் இரவும் பகலாக தேடி வந்தனர், தீவிர தேடுதலுக்கு பிறகு கண்ணில் சிக்கிய சிறுத்தைக்கு மைக்கை ஊசி செலுத்தினர், மயங்கி விழுந்து சிறுத்தையை வனத்துறையினர் வலையில் தூக்கி சென்று வனவிலங்கு வாகனத்தில் அடைத்தனர், இரண்டு பேரை கொண்டு சிறுத்தை வனத்துறை பாதுகாப்போடு வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.