தஞ்சையில் இரட்டைமலை சீனிவாசன் 78-ம் ஆண்டு நினைவு நாளில் திண்டாமை கொடுமை, சாதி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்ற கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை.!

தஞ்சாவூர், தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்ட சாதி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்! தஞ்சாவூரில் நடைபெற்ற இரட்டைமலை சீனிவாசன் 78 ஆம் ஆண்டு நினைவு நாளில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!!*நாடு விடுதலை பெறுவதற்கு முன்பாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பட்டியலின மக்களின் தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்ட, வர்ணாசிரம,மனுதர்ம ஆண்டான் -அடிமை முறைகளை எதிர்த்து போராடிய தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் 78 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் தஞ்சாவூர் ரெயிடியிடில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. நிகழ்விற்கு விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் அ.ரெ. முகிலன் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் தமிழ் முன்னிலை வகித்தார்.நிகழ்வில் இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக , தஞ்சாவூர் மாவட்ட தலைவர் சுரேஷ்,மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா,மக்கள் கலை இலக்கியக் கழக மாநகர செயலாளர் எழுத்தாளர் சாம்பான்,தமிழக உழைக்கும் மக்கள் முன்னணி தலைமை செயற்குழு உறுப்பினர் என்.மணி, ஏ ஐ டி யு சி ஆட்டோ சங்க மாவட்ட பொருளாளர் ஆர்.மலைச்சாமி, மார்க்சிய,பெரியாரிய, அம்பேத்கரிய உணர்வாளர் ஆட்டோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மூர்த்தி,சாமிநாதன், செல்வபதி, விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.ஏ.பி. சேவியர், நிர்வாகிகள் கிஷோர் ,சமாதானம், திருவையாறு ஒன்றிய செயலாளர் கடல்மணி, பொருளாளர் பழனிவேல்,அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக மாவட்ட தலைவர் சுரேஷ், புரட்சி பாரதம் நிர்வாகி ரெ. கார்த்திக்,சமூக ஆர்வலர்கள் பி.அற்புதராஜ், விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் இரட்டைமலை சீனிவாசன் பட்டியலின மக்களுக்காக முதன்முதலாக பத்திரிக்கையை பறையன் என்ற பத்திரிகையை தொடங்கி நடத்தியவர். அந்த பத்திரிகை மூலம் பட்டியலின மக்கள் நாள்தோறும் படுகின்ற தீண்டாமை கொடுமைகள், அவர்களுக்கு கல்வி உரிமை, தனி பள்ளிகள், நல வாரியங்கள் அமைப்பதற்கு காரணமாக இருந்தவர். நாட்டில் அனைத்து மக்களுக்குமான உரிமைகள் சட்டமாக்கப்பட வேண்டும் என்று ஆங்கிலேயர் ஆட்சிக்கு கோரிக்கை வைத்து போராடியவர். வர்ணாசிரம, மனுதர்ம, சனாதன கொள்கைகள் பட்டியலின மக்களை பார்த்தாலே தீட்டு தொட்டாலே தீட்டு என்றும் பொதுவிடங்களில் நடமாட முடியாத சூழல் உள்ளிட்ட மனித குலத்திற்கு எதிரான கொடுமைகளை அப்போதைய ஜார்ஜ் மன்னருக்கு புரிய வைத்தவர் ,அதன் மூலம் பல உரிமைகள் சட்டமாக்க வழி வகுத்தவர், சென்னை மாகாண சட்டசபையில் பொது இடங்களில் நடமாடவும், பொதுகுளம், கிணறு,தெருக்களில் நடமாடவும் சட்டமாக்க கோரிக்கைகளை வலியுறுத்தி பெற்று தந்தவர்,பட்டியலின மக்களின் கொடுமைகளுக்கு தீர்வு காண மதம் மாறினால் மட்டும் ஒழித்து விட முடியாது என்று டாக்டர் அம்பேத்கர், அயோத்தி தாசபண்டிதர் உள்ளிட்டவர்கள் மதம் மாற அழைத்த பொழுது கடுமையாக எதிர்த்தவர், உறுதியான, ஒன்றுபட்ட போராட்டங்களின் மூலம் தீண்டாமை கொடுமைகளுக்கும், மக்களின் விடுதலைக்கும் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி போராடி வந்தவர். அவரது நினைவு நாளில் தமிழ்நாட்டில் நிலவி வரும் தீண்டாமை கொடுமைகளுக்கு, சாதி ஆணவ படுகொலைகளுக்கு முடிவு கட்ட தமிழ்நாடு அரசு சாதி ஒழிப்பு சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாளில் கோரிக்கை வைக்கப்பட்டது.