தஞ்சையில் 3 நாட்கள் நடைப்பெற்ற மாநில அளவிலான கேரம் போட்டி..!

தஞ்சையில் 3 நாட்கள் நடைப்பெற்ற மாநில அளவிலான கேரம் போட்டியில் வெற்றிப் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கேரம் கழகம் மாநிலத் தலைவரும். தஞ்சை மேயருமான சண். இராமநான் சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார்.

தஞ்சை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கன்வென்ஷன் ஹாலில் தமிழ்நாடு மாநில கேரம் கழகம் சார்பில் மாநில அளவிலான கேரம் போட்டி கடந்த 15ம் தேதி துவங்கியது. 3 நாட்கள் தொடர்ந்து நடந்த இப்போட்டியில் 24 மாவட்டங்களில் இருந்து 250 வீரர். வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். ஆடவர் பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் என இரண்டு பிரிவுகளாகவும் மகளிர் பிரிவில் ஒற்றையர் பிரிவிலும் போட்டிகள் நடந்தன. 3 சுற்றுகளாக நடந்த இறுதி ஆட்டத்தில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சென்னையை சேர்ந்த அப்துல் ஆசிப் என்பவரும், இரட்டையர் பிரிவில் சென்னையை சேர்ந்த அசோக்குமார் மற்றும் டில்லிபாபு ஆகியோரும், மகளிர் ஒற்றையர் பிரிவில் மதுரையை சேர்ந்த மித்ராவும் வெற்றிப் பெற்றனர். வெற்றிப் பெற்றவர்களுக்கு மாநில கேரம் கழக தலைவரும், தஞ்சை மாநகராட்சி மேயருமான சண்.இராமநாதன் சான்றிதழும், பரிசுத்தொகையும் வழங்கி பாராட்டினார்.