ஆனைமலையில் கஞ்சா விற்ற நபர் கைது..!

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் ஆனைமலை பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆனைமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான ஆனைமலை ஆற்றுப் பாலம் பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருந்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஹக்கீம் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 2.800 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா, செல்போன்கள் -2 மற்றும் ரூ.1900/-பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேற்படி நபரை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.