கோவை, செல்வபுரம் பகுதியில் பண மோசடி செய்த நபரிடம், பணத்தை மீட்டு தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட அ.மு.மு.க பிரமுகர் கைது 

கோவை, செல்வபுரம் பகுதியில் பண மோசடி செய்த நபரிடம், பணத்தை மீட்டு தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட அ.மு.மு.க பிரமுகர் கைது 

கோவை,  செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. அலுமினிய வியாபாரியான ரவிக்கு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் வசித்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் அறிமுகமாகி உள்ளார். இந்த நிலையிலே கண்ணனுக்கு தொழில் ஒப்பந்தம் அடிப்படையில் ரூபாய் 60 லட்சம் மதிப்பிலான பொருட்களை ரவி அனுப்பி வைத்து உள்ளார். மாதங்கள் பல கடந்தும் கண்ணன் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்து உள்ளார். இது குறித்து ரவி ஏற்கனவே போலீசாரிடம் புகார் அளித்து உள்ள நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே கண்ணனின் ஊரைச் சேர்ந்த அ.மு.மு.க பிரமுகர் பூலோக பாண்டியன் என்பவர் ரவிக்கு அறிமுகமாகி உள்ளார். அப்போது பூலோக பாண்டியன், கோவை தொழில் அதிபரான ரவியிடம், கண்ணனின் சொத்துக்கள் அடமானத்தில் உள்ளதாகவும், 13 லட்சம் கொடுத்தால் சொத்துக்களை மீட்டு தருவதாகவும் கூறி உள்ளார். இதை நம்பிய ரவி, பூலோக பாண்டியனிடம் இரண்டு தவணைகளில் 13 லட்சம் ரூபாயை கொடுத்து உள்ளார். ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்ட பூலோக பாண்டியன், கண்ணனிடம் இருந்து பணத்தை பெற்று தரவில்லை என்று கூறப்படுகின்றன. தான் கொடுத்த பணத்தை ஏமாற்றி விட்டதாக கூறி, செல்வபுரம் போலிசில், அ.ம.மு.க பிரமுகர் பூலோக பாண்டியன் மீது, புகார் ஒன்றை தந்து நடவடிக்கைக்கு கோரி இருக்கின்றார். புகாரின் அடிப்படையில் செல்வபுரம் போலிசார் வழக்கு பதிந்த செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில்  பூலோக பாண்டியன் கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவானார். கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை தலைமறைவாகி இருந்த அமமுக பிரமுகர் பூலோக பாண்டியன் தூத்துக்குடியில் பதுங்கி இருந்த போது போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.