கோவை மதுக்கரை கிராம நிர்வாக அலுவலராக உள்ளவர் பாலசந்திரன். இவர் தனது உதவியாளருடன் மதுக்கரை ராணுவ முகாம் எதிரே ரோந்து சென்றனர். அப்போது அங்கு துர்நாற்றம் வீசியது. உடனே அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கு மனித எலும்பு கூடு மற்றும் மண்டை ஓடு கிடந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து மதுக்கரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து எலும்பு கூடை மீட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு இங்கு கிடந்த எலும்பு கூடு ஆணின் எலும்பா அல்லது பெண்ணா? அது யார்? எங்வாறு இறந்தார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply