அதிவேகமாக வந்த லாரி… பேருந்து நிறுத்தத்தில் நடந்த கோர விபத்து… சம்பவ இடத்திலேயே 6 பேர் உடல் நசுங்கி பலியான பரிதாபம்..!

த்தியப் பிரதேச மாநிலம், ரத்லம் மாவட்டத்தில் நேற்று சுமார் 20 பேர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, சரக்கு லாரி ஒன்று சாலைச் சந்திப்பில் வேகமாக வந்ததாகத் தெரிகிறது. எதிர்பாராதவிதமாக பேருந்து நிறுத்தத்தில் நின்றவர்கள் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தைத் தொடர்ந்து, லாரி ஓட்டுநர் லாரியை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து அவர் பதற்றத்துடன் ஓடியதை மக்களில் சிலர் பார்த்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. லாரி பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநரைத் தேடும் பணியும் நடைபெறுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் நரேந்திர குமார் சூர்யவன்ஷி கூறுகையில், “விபத்தில் ஆறு பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் எட்டுப் பேர் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரைக் கைது செய்ய போலீசார் தேடிவருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.