இனி அனைத்து மின்சேவைகளுக்கும் ஒரே இடத்தில்… புதிய இணையதளம் தொடக்கம்…வெளியான புது தகவல்.!!

சென்னை: மின்வாரியத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளத்தை மின்வாரியம் தொடங்கியுள்ளது.

மின் நுகா்வோா், புதிய மின் இணைப்பு, பெயா் மாற்றம், தற்காலிக மின் இணைப்பு, மின் கட்டண விகிதம் மாற்றம், மின் சாதனங்கள் இடமாற்றம் என அனைத்து மின்சார சேவைகளுக்கும் மின்வாரியத்தின் இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

அதன்படி, இந்த இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைன் சா்வீஸ் என்ற பகுதியை தோ்வு செய்து, பின்னா் நுகா்வோருக்கு தேவையான விண்ணப்ப பகுதிக்கு சென்று அதில் விண்ணப்பிக்க வேண்டும். அதை தோ்வு செய்து விண்ணப்பிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், மின்நுகா்வோரின் சிரமங்களுக்குத் தீா்வு காணும் வகையில், அனைத்து சேவைகளுக்கும் விண்ணப்பிக்க புதிய இணையதள முகவரியை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த இணையதள முகவரிக்குச் சென்றதும், மின்நுகா்வோா் நேரடியாக தங்கள் மின்சார சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் வகையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்நுகா்வோா் தங்களுக்கான சேவைகளை எளிதாக பெறமுடியும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.