கோவையில் நீடிக்கும் பதற்றம்: கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. மக்களிடமிருந்து மனுக்களை கலெக்டர் சமீரன் பெற்றுக் கொண்டார். பின்னர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதால் கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர்கள் கலெக்டர் அலுவலகம் வரும் மக்களை மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர்.