500 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஐஐடி சிறப்பு பயிற்சி -1 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள்.!

னைவருக்கும் ஐஐடி எனும் திட்டம் மூலம் தமிழகத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 500 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகமான ஐஐடி கல்லூரிகளில் சேருவது என்பது பல மாணவர்களின் கனவாக இருந்து வருகிறது. அதற்கு தயாராவதற்கு GATE எனும் நுழைவு தேர்வை எழுத வேண்டும். அந்த கடுமையான நுழைவு தேர்வு குறித்தும், ஐஐடி கல்லூரி குறித்தும் ஊக்கம் அளிக்கும் வகையில் புதிய முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

அனைவருக்கும் ஐஐடி (IITM) எனும் திட்டத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வானது சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.

 இந்த நிகழ்வில், தமிழகத்தில் 250 அரசு பள்ளிகளில் இருந்து 500 அரசு பள்ளி ஆசிரியர்களுக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இன்றைய நிகழ்வில், 1 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மின்னணு பெட்டகங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.