வால்பாறை பழங்குடி ஆதிவாசி கிராமங்களில் கிராம சபை கூட்டம் – சார் ஆட்சியர் பங்கேற்பு..!

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வன சரகங்களில் சுமார் 8 பழங்குடியின மக்கள் வாழும் கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களில் ஒவ்வொரு பிரதி மாதமும் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல நேற்று வால்பாறை வன சரகதிற்கு உட்பட்ட கவர்க்கல் பகுதியில் உள்ள பழங்குடியினர் கிராமம் மற்றும் மானாம்பள்ளி வன சரகதிற்கு உட்பட்ட சின்கோனா பழங்குடியின கிராமத்திலும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் பயிற்சி சார் ஆட்சியர்கள், தனி வட்டாட்சியர் ஜெகதீஷ், பழங்குடியினர் வட்டாட்சியர் தணிகைவேல், மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன், வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ், மற்றும் 21 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரி ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஆதிவாசி மக்கள் கிராமத்தில் தேவையான அடிப்படை வசதிகள், இதில் கவர்க்கல் செட்டில்மென்ட் பகுதியில் சாலையோரம் உள்ள குடியிருப்புகளுக்கு மின்சார வசதி, சாலை வசதி, குடிதண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் சிங்கோனா பழங்குடியினர் கிராமத்தில் வனப்பகுதியில் சேகரிக்கும் தேன், மிளகு, காப்பி, ஏலக்காய் போன்ற பொருட்களை விற்பனை செய்ய அதற்க்கான விற்பனை கூடம் அமைத்து தரவும், குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சார் ஆட்சியரிடம் தெரிவித்தனர். அனைத்து கோரிக்கைகளையும் கனிவுடன் கேட்டறிந்த சார் ஆட்சியர் அதற்கான மனுக்களையும் பெற்றுக் கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆட்சியரின் உத்தரவிற்கிணங்க உரிய நடவடிக்கை மேற் கொள்வதாக உறுதியளித்தார் . இந்த கிராமசபை கூட்டத்தில் திரளான மலைக்கிராம மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..