கோவை மத்திய சிறை வளாகத்தில் அரசு சார்பில் பொருட்காட்சி நடைபெற்று வந்தது 19 நாட்கள் நடைபெற்ற கண்காட்சியில் ஒவ்வொரு நாள்தோறும் தமிழக அரசின் துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் துறை சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக தமிழக வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் .பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவியாக இருக்கும் யானைகள் குறித்தும், காடுகள் வன விலங்குகளின் அவசியம் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் வனத்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது. இறுதி நாளான நேற்று கோவை வனச்சரகத்தில் வனக்காப்பாளராக பணியாற்றி வரும் சோழ மன்னன் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் சினிமா பாடல் மெட்டுக்களுடன் யானையின் சிறப்புகள் குறித்து பாடலாக பாடினார். நடிகர் பிரபு நதியா மீனா நடிப்பில் வெளியான ராஜகுமாரன் படத்தில் வரும் என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை என்ற பாடல் மெட்டை யானை குறித்த விழிப்புணர்வு பாடலாக பாடியது அங்கிருந்த அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. சோழ மன்னன் பாடிய பாடல் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. முன்னதாக
வனத்துறை சார்பில் கோவை மாவட்டம் காரமடை சுற்றியுள்ள பில்லூர் பரளிக்காடு உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரசு பொருட்காட்சியை கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர்.
Leave a Reply