தடுப்பணையில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி மரணம் – கொலையா..? பெற்றோர் போலீசில் புகார்..!

கோவை: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி, விவசாயி. இவரது மகன் கார்த்திகேயன் ( வயது 22) கோவை மாவட்டம் கிணத்துக்கடவு  பக்கம் சொலவம் பாளையம் பகுதியில் உள்ள வி .எஸ். பி .பொறியியல் கல்லூரியில் நாம் ஆண்டு படித்து வந்தார் .கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கார்த்திகேயன் முடி வெட்டிவிட்டு வருவதாக கூறிவிட்டு கல்லூரியிலிருந்து சிக்கலாம்பாளையம் வந்தார் .பின்னர் அவர் அந்த பகுதியில் தங்கி இருந்து அதை கல்லூரியில் படித்து வரும் தனது நண்பர்களான ஜீவானந்தம் மாதவன், ஹரி இளங்கோ உட்பட 8 பேருடன் வடபுதூர் பகுதியில் உள்ள தடுப்பணைக்கு குளிக்க சென்றார். அங்கு குளித்துக் கொண்டிருந்த கார்த்திகேயன் நீரில் மூழ்கினார். தகவல் அறிந்ததும் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி ,சப் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் கிணத்துக்கடவு தீயணைப்பு அதிகாரி தங்கராஜ் தலைமையில் ‘விரைந்து சென்று தேடினர். இரவு நேரமானதால் மீட்க முடியவில்லை . இந்த நிலையில் நேற்று காலையில் மீட்பு பணி நடந்தது .அப்போது நீரில் மூழ்கி இருந்த கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனது மகனின் உடலில் காயங்கள் இருப்பதால், சாவில் சந்தேகம் உள்ளது என்று தந்தை திருப்பதி கூறியுள்ளார். இது குறித்து போலீசார் கார்த்திகேயனிடம் குளித்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையின்படி மாணவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..