கோவையை சேர்ந்தவர் 19 வயது வாலிபர். இவர் கோவையில் உள்ள கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். இந்தநிலையில் இவருக்கும், 16 வயது சிறுமியான பிளஸ் – 2 மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் அடிக்கடி பேசி வந்தனர். மேலும் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதற்கிடையே சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி காரணமாக, அவரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த சிறுமி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் ஆலாந்துறை போலீசார் கல்லூரி மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். சிறையில் அடைந்தனர்.
பிளஸ் – 2 மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் போக்சோவில் கைது..!








