கோவையில் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து; இருவர் பலியான அதிர்ச்சி சி.சி.டி.வி காட்சிகள்… 

கோவையில் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து; இருவர் பலியான அதிர்ச்சி சி.சி.டி.வி காட்சிகள்… 

கோவை சரவணம்பட்டியை சேர்ந்த கதிரவன் என்பவர் தனது காரில் பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை நோக்கி சுற்றுலா சென்று விட்டு மீண்டும் கோவைக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது, அவரது கார் வால்பாறை – பொள்ளாச்சி சாலையில் ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடி அருகே வந்த போது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் பலமாக மோதியது.

இதில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சேக் முகமது, இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த இதயத்துல்லா என்பவர் என இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

இதில், சம்பவ இடத்திலேயே ஷேக் முகமது பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த இதயத்துல்லாவை போலீசார் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் இதயத்துல்லா பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் இதயத்துல்லா பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து ஆழியார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கதிரவன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆழியார் சோதனைச் சாவடியை கடந்த ஒரு சில மீட்டர் தொலைவில், இரு சக்கர வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.