கோவை கணபதி அத்திப்பாளையம் பிரிவில் உள்ள பாவையர் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி பத்மா ராணி( வயது 37) இவர் கோவை அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு அவரது வீட்டில் அவர் அணிந்திருந்த 5 பவுன் செயினை கழட்டி வைத்து விட்டு தூங்க சென்று விட்டார் . காலையில் பார்த்த போது செயினை காணவில்லை . யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து டாக்டர் பத்ம ராணி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply