கோவை பெரியார் நகர் ஜாகீர் உசேன் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் .இவரது மகள் மகேஸ்வரி( வயது 21) இவர் நேற்று டவுன் பஸ்சில் பயணம் செய்தார் காமராஜர்புரம் சந்திப்பில் உள்ள பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போதும் இவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க செயினை காணவில்லை. யாரோ பஸ்சினுள் திருடிவிட்டனர்.இது குறித்து மகேஸ்வரி ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Leave a Reply