வில்லிவாக்கம் தெற்கு ஒன்றியச் செயலாளராக இருந்த துரைவீரமணி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், “சென்னை தெற்கு மாவட்டம், வில்லிவாக்கம் தெற்கு ஒன்றியச் செயலாளர் அ.ம. துரைவீரமணி கழகக் கட்டுப்பாட்டை மீறியும். கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி (Dismiss) வைக்கப்படுகிறார். இவரோடு கழகத்தினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்தது முதல் மாற்றுக் கட்சியை சேர்ந்த சிலர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், அ.ம. துரைவீரமணி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்கு சமீபத்தில் ரகசிய கூட்டம் போட்டதாக தகவல்கள் வருகின்றன. இதைத் தொடர்ந்துதான் அவர் மீது திமுக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.









