கோவை சரகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, ஆகிய 4 மாவட்டங்கள் உள்ளன. இந்த சரகத்தில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்து 22 பேர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் உடனே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பொறுப்பு ஏற்க கோவை சரக டி.ஐ.ஜி.உத்தரவிட்டுள்ளார் .அதன்படி கோவை ரயில்வே இன்ஸ்பெக்டர் கோமதி ஈரோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கும் ,அங்கு பணியாற்றியசிவகாமி ராணி நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்துக்கும், கோபி மதுவிலக்குஅமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா ஊட்டி டவுன் மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றிய நித்யா கோபி மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் சதீஸ்வரன் அவிநாசிக்கும், திருப்பூர் மாவட்டம் செய்யூர் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி அவிநாசிக்கும், தளி இன்ஸ்பெக்டர் தனலட்சுமி நீலகிரி மாவட்டம் நிலக்கோட்டைக்கும், அவிநாசி மகளிர் இன்ஸ்பெக்டர் அமுதா காருண்யா நகருக்கும், ஈரோடு மாவட்டம் நம்பியூர் இன்ஸ்பெக்டர் ரவி ஈரோடு மாவட்ட தீவிர குற்றப்புலனாய்வு பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய சண்முகவேல் நம்பியூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .மடத்துக்குளம் இன்ஸ்பெக்டர் ரவி ஆனைமலைக்கும், காங்கேயம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா கோபி மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றிய அந்தோணி ஜெகதா காங்கேயம் மகளிர் போலீசுக்கும், ஈரோடு மாவட்டம் பெருந்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சிவகிரிக்கும் ,அங்கு பணியாற்றிய கிருஷ்ணகுமார் மடத்துக்குளத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். க.க.சாவடி இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பெருமாள் தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய உதய சந்திரன் க.க.சாவடிக்கும் பெருந்துறை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் கோவை மாவட்ட ஆயுதப்படைக்கும் அங்கு பணியாற்றிய முருகன் பெருமாநல்லூருக்கும் ,ஈரோடு ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் லயோலா இன்னாசி மேரி பெருந்துறை போக்குவரத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்..
22 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்







