ஆசிய பாரா விளை​யாட்​டில் பதக்கம் வென்று வரலாற்று சாதனை – பிரதமர் மோடி வாழ்த்து

ஆசிய பாரா விளை​யாட்​டுப் போட்​டி​யில் பதக்​கம் வென்ற இந்​திய வீரர், வீராங்​க​னைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரி​வித்​துள்​ளார்.

ஜப்​பானின் ஐச்சி-நகோயா மாகாணத்​தில் ஆசிய பாரா விளையாட்​டுப் போட்​டிகள் கடந்த 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடை​பெற்​றன. இந்​தப் போட்​டி​யில் மொத்​த​மாக இந்​தியா 30 தங்​கம், 35 வெள்ளி, 49 வெண்​கல பதக்​கங்​களை வென்று, 114 பதக்கங்​களு​டன் 4-ம் இடத்​தில் நிறைவு செய்​தது.

இந்​நிலை​யில், பாரா விளை​யாட்​டுப் போட்​டி​யில் பதக்​கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரி​வித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்​தில் நேற்று கூறிய​தாவது:

ஆசிய பாரா விளை​யாட்டு போட்​டியை நமது மாற்​றுத்​திறனாளி வீரர், வீராங்​க​னைகள் மகத்​தான சாதனையுடன் நிறைவு செய்துள்​ளனர். 114 பதக்​கங்​களை வென்று இந்​திய வீரர்​கள் சாதனை படைத்​துள்​ளனர். இது​தான் இந்​தி​யாவின் மிகச்​சிறந்த செயல்​பாடு. இந்த நிகழ்வு ஒட்​டுமொத்த நாட்​டுக்​கும் மகிழ்ச்​சி​யும் மிகுந்த பெரு​மையும் அளித்​துள்​ளது.

தனித்​து​வ​மான விடா​முயற்​சி​யுடன் விளை​யாடிய ஒவ்​வொரு விளை​யாட்டு வீரர், வீராங்​க​னைகளுக்​கும் எனது வாழ்த்​து​கள். ஒவ்​வொரு தடகள வீரர், வீராங்​க​னைகளும் இந்த வரலாற்​றுச் சாதனை​யில் பங்​களித்​துள்​ளனர். தங்​களது வெற்​றி​யின் மூலமாக இந்​தி​யர்​களுக்கு அவர்​கள் உத்​வேகத்தை அளித்​துள்​ளனர். இவ்வாறு பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.