கோவை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் இரண்டாம் நிலைக் பெண் காவலர் ஸ்ரீநிதி . இவர் ஹைதராபாத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சி. ஐ. எஸ். எப்) சார்பில் 23.07.2026 முதல் 30.07.2026 வரை நடைபெற்ற 11-வது அகிலஇந்திய காவல்துறை ஜூடோ கிளஸ்டர் விளையாட்டுப் போட்டிகள் – 2026-இல், டேக்வாண்டோ பிரிவில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்று கோவை மாவட்ட காவல்துறைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இவரது சாதனையை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் கே. ரெட்டி பெண் காவலர்ஸ்ரீநிதியை மாவட்ட காவல் அலுவலகத்திற்குநேரில் அழைத்துப் பாராட்டி, தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பதக்கம் வென்ற கோவை பெண் காவலருக்கு எஸ்பி பாராட்டு!








