தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி மீண்டும் இணைந்தது

திரைத்துறையில் பெரிதும் பேசப்பட்ட தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது இருவரும் மீண்டும் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தங்களது விவாகரத்து அறிவிப்புக்குப் பிறகும் கூட, தங்களது மகன்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பரஸ்பரம் சுமுகமான உறவையும் பொறுப்புகளையும் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

தற்போது நடிகர் தனுஷ் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் குடும்பத்துடன் நட்புறவைப் பேணி வருவதாகவும், இதனால் தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் நெருக்கமாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.இதற்கிடையில், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருடன் தனுஷுக்கு முன்னர் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், விரைவில் புதிய படம் ஒன்றிற்காக இவர்கள் இருவரும் மீண்டும் இணையக்கூடும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அனிருத்தின் வரவிருக்கும் திருமண விழாக்களில் தனுஷும் ஐஸ்வர்யாவும் ஒன்றாகக் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.