தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில், தாய்மாமன் சீர்மரபைப் பிரதிபலிக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” (Thai Maman Thanga Mothiram Thittam) என்ற சிறப்பு நலத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது.இத்திட்டத்தின் கீழ், 22.06.2026 அன்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களால் இத்திட்டம் நேற்று மாநிலம் முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது. அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிருடன் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது. கோயம்புத்தூர் ( Coimbatore) , பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் வால்பாறையில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் மையங்கள், தேதிகள் மற்றும் தேவையான ஆவணங்களின் முழு விவரங்கள் இதோ.இத்திட்டத்தில் பயன்பெற, EKYC பதிவு பெற்ற ஆதார் அட்டை, குடியிருப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, தொழிலாளர் நலவாரியம் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை அஞ்சல் துறையின் மூலம் வழங்கப்பட்ட முகவரிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆறு தமிழ்நாடுகுடியிருப்பு அடையாளச் சான்றிதழ்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஏதேனும் ஒரு அடையாளச் சான்றினை தாய்மார்கள் கொண்டிருக்க வேண்டும்.
பயனாளிகளின் வசதிக்காக அந்தந்த பகுதிகளிலிருந்து வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டு தங்க மோதிரம் காலை 10.00 மணி மற்றும் மதியம் 1.00 மணி என இரு வேளைகளில் வழங்கப்படும். கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு மையத்திலும் நாள்தோறும் காலை 25 பேருக்கும், மதியம் 25 பேருக்கும் மட்டுமே மோதிரம் வழங்கப்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பிதழ்கள் அந்தந்த பகுதி கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் மட்டும் பயனாளிகள் தவறாமல் வருகை புரிந்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுகுறித்த சந்தேகங்களுக்கு 9840713553 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28.09.2026 முதல் 09.11.2026 வரை
கோயமுத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோயமுத்தூர் மாநகராட்சி, சர்க்கார் சாமகுளம், சூலூர், சுல்தான்பேட்டை , மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், ஆகிய பகுதிகளை சேர்ந்த பயணாளிகள் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.
28.09.2026 முதல் 12.10.2026 வரைபொள்ளாச்சி அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி நகராட்சி, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம், ஆகிய பகுதிகளை சேர்ந்த பயணாளிகள் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.
28.09.2026 முதல் 05.10. 2026 வரை
அரசு மருத்துவமனை மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் நகராட்சி, காரமடை, அன்னூர்,
ஆகிய பகுதிகளை சேர்ந்த பயணாளிகள் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.
28.09.2026 முதல் 29.09 2026 வரை
வால்பாறை அரசு மருத்துவமனை, வால்பாறை பகுதிகளை சேர்ந்த பயணாளிகள் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.







