சென்னையில் தனியார் நிறுவன ஆண்டு விழாவில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்வில் அவர் பேசுகையில், திறமையான வீரர்களை வளர்ப்பதற்கான அரசு தற்போது அமைந்துள்ளதாகவும், திறமையான வீரர்களுக்கு நம்பிக்கையான ஒருவராக முதலமைச்சர் விஜய் இருப்பார் என்றும், விளையாட்டுத் துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் வகையில், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “எனது நெருங்கிய நண்பர் வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு முதலீடு செய்வதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு வந்தார். நான் சொன்னால் நடக்கும் என்று, அவரை ஒருவரிடம் அனுப்பினேன். அவர் ரூ.2,000 கோடி முதலீடு செய்ய வந்தார். ‘போய் பார்த்தீர்களா? என்ன நடந்தது?’ என்று கேட்டேன். ‘அவர்கள் ரூ.200 கோடி லஞ்சம் கேட்டார்கள். எனக்குத் தலை சுற்றியது. மொத்தமே அவ்வளவுதான். நான் ஆந்திராவுக்குப் போய்விட்டேன்’ என்றார். இதனால் நான் தூங்கவே இல்லை.” என்று அவர் தெரிவித்துள்ளார்..







