கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது இந்நிலையில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி நடமாடி வருவது வாடிக்கையாகிவிட்டது இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் இரண்டாவது டிவிசன் ஐந்துலயன் பாடி என்ற பகுதியில் உள்ள தொழிலாளி ஜோதி என்பவரின் வீட்டருகில் உள்ள செப்டிக் டேங்கில் நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் எதிர்பாராத விதமாக ஐந்து வயது மதிக்கத்தக்க காட்டெருமை ஒன்று தவறி விழுந்து தத்தளித்துள்ளது சத்தம் கேட்டு எழுந்து நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வால்பாறை வனச்சரக அலுவலருக்கும் எஸ்டேட் மேலாளருக்கும் தகவல் அளித்துள்ளனர் அதனடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனக் காப்பாளர் தர்மராஜ் மற்றும் மனித வனவிலங்கு மோதல் தடுப்பு குழு முத்துராஜ் தலைமையிலான குழுவினருடன் எஸ்டேட் தொழிலாளர்களும் இணைந்து சுமார் நான்கு மணிநேரம் மீட்புப் பணியை துரிதப்படுத்தி செப்டிக் டேங்கில் விழுந்து தத்தளித்துப் போராடி வந்த காட்டெருமையை பத்திரமாக மீட்டனர் ஆனாலும் ஆக்ரோஷமாக வனத்துறையினரை மிரட்டியவாறு சிறிது நேரம் அங்கும் இங்கும் ஓடிய காட்டெருமை பின்பு அப்பகுதியிலிருந்து ஓடிச்சென்றது மேலும் மீட்பு பணியில் ஈடுபட்ட வனக் காவலர் சிவக்குமார், மனித வனவிலங்கு மோதல் தடுப்பு குழுவினர் கார்த்தி, கனிவாணன், அருண், எஸ்டேட் வாச்சர் ஆனந்த், தொழிலாளர்கள் பழனிச்சாமி மற்றும் ஜோதி உள்ளிட்ட அனைவரின் இந்த துரித மீட்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்
செப்டிக் டேங்கில் விழுந்த காட்டெருமை – 4 மணி நேரம் போராடி மீட்பு







