கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் சொத்துவரி உள்ளிட்ட வரிகளை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளவர்கள் மீது ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் வெங்கட லட்சுமணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது நகராட்சி வரி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது நகராட்சியில் வளர்ச்சி பணிகளான குடிநீர் விநியோகம், தெருவிளக்கு பராமரிப்பு, சாலை வசதி மற்றும் தூய்மை பணிகள் போன்ற அனைத்து பணிகளும் பொதுமக்கள் செலுத்தும் வரிப்பணத்தின் மூலமாகவே மேற்க் கொள்ளப்பட்டு வருகின்றன எனவே 2026-2027 ஆண்டிற்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தாமலும் கடைவாடகை நிலுவை வைத்துள்ள பொதுமக்களும் வணிகர்களும் உடனடியாக நகராட்சி அலுவலகத்தை அணுகி வரிபாக்கியை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். தொடர்ந்து வரி செலுத்தாமல் வரி மற்றும் கடை வாடகை நிலுவையில் வைத்துள்ளவர்கள் மீது நகராட்சி நிர்வாக சட்டத்தின் படி ஜப்தி நடவடிக்கை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்க் கொள்ளப்படும் என்று தொனி வித்துள்ளார்
வரி பாக்கி வைத்துள்ளவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை








