இஸ்ரோ மீது உலக நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கை, விஞ்ஞானிகள்,பொறியாளர்கள் உள்ளிட்டோரின் அர்ப்பணிப்பு மற்றூம் கடின உழைப்பை பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற முதல் சர்வதேச விண்வெளி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 2035ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் தனக்கென தனி விண்வெளி மையத்தை உருவாக்கவும், 2040ஆம் ஆண்டுக்கு நிலவில் மனிதர்களை தரையிறக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இஸ்ரோ மீது உலக நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கை, இந்திய விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் அணுகுமுறை, ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அறிவியல் தரவுகள் வெளிப்படைத் தன்மையுடனும் நேர்மையுடனும் பொதுவான நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கோட்பாட்டில் இந்தியா மற்றும் இஸ்ரோ உறுதியாக இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.








