மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,035 கனஅடியில் இருந்து 10,485 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்தானது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கானது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. நீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியுள்ளது. மேலும் 17.6 டி.எம்.சி. நீர் திறக்கவும் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.