கோவை மாநகர போலீசில் கமிஷனர் கண்ணன் உட்பட 43 பேருக்கு முதல்வர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், குற்றச் செயல்களைத் தடுப்பதிலும் முனைப்புடன் செயல்பட்ட மற்றும் சிறப்பாக பணியாற்றிய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், துணை கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐ.,க்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு முதல்வரின் விருதுகள் மற்றும் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி போலீஸ் கமிஷனர் கண்ணன், துணை கமிஷனர்கள் கார்த்திகேயன், தங்கதுரை மற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐ.,க்கள், போலீசார் என 40 பேரும், புகைப்படக் கலைஞர்கள் 3 பேரும் என 43 பேர் தேர்வாகி உள்ளனர். அவர்களுக்கு போலீஸ் அதிகாரிகள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்
கோவை காவல் அதிகாரிகளுக்கு முதல்வர் விருது







