இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் 2029 ஆம் ஆண்டுக்குள் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.நரேந்திர மோடி பொது வாழ்க்கையில் முதலமைச்சர், பிரதமர் என 25 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு
மத்தியில் ஆளும் பாஜக அரசு ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பாக பிரதமரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் நாள் முதல், அவர் முதன்முதலில் குஜராத் முதலமைச்சராகப் பதவியேற்ற நாளான அக்டோபர் 7 ஆம் தேதியைக் கடந்து, அக்டோபர் 17 வரை கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவில் ஒரு சில தலைவர்களே 25 ஆண்டுகள் அரசுப் பதவியை நிறைவு செய்துள்ளனர் என்றார்.பாஜக ஆட்சியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள நிலையில், முத்தலாக் முறை நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.பாஜகவும் அதன் கூட்டணியும் 19 மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் ஆட்சி செய்யும் நிலையில் 21 இடங்களிலும் 2029க்குள் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்றார்.
மேலும், டெல்லி, மேற்கு வங்கம், அசாம், உத்தராகண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பிகார், உத்தரபிரதேசம், உத்தராகண்ட், குஜராத் மாநிலங்களில் ஏற்கனவே பொது சிவில் சட்டம் அமலில் உள்ளதாகவும் கூறினார்.2014-க்கு முன்பு, நமது தேசிய அரசியல் ஊழல், சாதியியம் மற்றும் வாரிசு அரசியலால் சீரழிந்து இருந்ததாகவும் குற்றம்சாட்டினார்…






