சட்டப்பேரவை செயலாளர் ராஜினாமா!

ட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பணியாற்றியதில் நீண்ட கால அனுபவம் கொண்டவர் சீனிவாசன்.குறிப்பாக 2018ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை செயலாளராக பணியாற்றி வந்தார். முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி,மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் அந்த பதவியை தொடர்ந்தார். தற்போது தவெக ஆட்சியிலும் சட்டப்பேரவை செயலாளராக நீடித்தார்.2023ஆம் ஆண்டு சீனிவாசன் பணி ஓய்வு பெறவிருந்த நிலையில், 3 ஆண்டு காலம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன்படி அவரது பணி காலம் வரும் செப்டம்பர் மாதம் வரை தொடர்கிறது. இந்தசூழலில் தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கியிருக்கிறார். ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

எனினும் 30 ஆண்டுகளுக்கும் மேலான சட்டப்பேரவை பணி தொடர்பான அனுபவம் கொண்டவர் சீனிவாசன். இன்னும் 3 மாதங்கள் பணி காலம் இருக்கும் நிலையில் முன்கூட்டியே ஏன் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.