உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக தங்களை நிர்பந்தித்ததாகவும், கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில் மதிமுகவுக்கு வெறும் 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிருப்தி தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் நீடிக்குமா? அல்லது விஜய்யின் தவெகவுடன் இணையப் போகிறதா? என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான தகவல் பரவி வரும் நிலையில் எந்த ஒரு பெரிய முடிவும் நாங்கள் எடுக்கவில்லை என்றும், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க மாட்டோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
நீங்களா ஒரு கற்பனை செய்யக்கூடாது.. நாங்கள் திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக நின்று, அனைத்து தொகுதிகளிலும் தங்கள் உடல் பொருள் ஆவியை கொடுத்து போராடி பணியாற்றினோம். 34 தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நான் பிரச்சாரம் செய்தேன். ஒவ்வொரு இடத்திலும் சுமார் 1 மணி நேரம் எனது உணர்ச்சிகளை கொட்டி திமுக வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்டு வாக்கு சேகரித்தேன். இதில் 24 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது.




