2020-ம் ஆண்டு அவர் பா.ஜ.க.வில் இணைந்தார் அண்ணாமலை. கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை, தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு சில காலம் விவசாய பணிகளில் ஆர்வம் காட்டி வந்தார்.கடந்த 2020-ம் ஆண்டு அவர் பா.ஜ.க.வில் இணைந்தார்.அவரது அதிரடியான பேச்சுக்களால் இளைஞர்களை வெகுவாக கவர்ந்ததுடன், நடைபயணம் மூலம் கட்சியையும் வளர்த்தார். இதனிடையே சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு மாநில பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டார்.இதையடுத்து தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், 27 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க. ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற தொகுதிகளில் படுதோல்வியை சந்தித்தது. இதைத்தொடர்ந்து. தோல்விக்கான காரணங்கள் ஆராயப்பட்டன.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டது ஒரு காரணம் என்று அவரது ஆதரவாளர்கள் வலைத்தளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். அண்ணாமலை மாநிலத்தலைவராக இருந்தபோது, நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 11 சதவீத வாக்குகளை பெற்றிருந்த நிலையில் தற்போது அது 2 சதவீதமாக குறைந்துள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து, அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப்போகிறார் என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டது. புதிய கட்சி குறித்த அறிவிப்பை அண்ணாமலை தனது பிறந்தநாளான வருகிற 4-ந்தேதி அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது தொடர்பான தகவல்கள் சட்டசபை தேர்தலுக்கு முன்பே பரவி வந்தன.இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகுவதற்கான ஐந்து பக்க கடிதத்தை கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபினிடம் வழங்கினார் அண்ணாமலை.அதிமுக கூட்டணிக்குத் தலைமை இசைவு கொடுத்தது, தமக்குத் தலைவர் பதவி பறிக்கப்பட்டது போன்ற அதிருப்திகளால் இந்நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார்





