எபோலா வைரஸ் பரவல் எதிரொலி… கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயம்

வெளிநாடுகளில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது .இதனால் வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்களா ?என்பதை குறித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் எபோலா வைரஸ் பரிசோதனை முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்வதுடன் அந்த பணிகள் எந்த நாட்டில் இருந்து வருகிறார்கள்? என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்கள். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது :- கோவை விமான நிலையத்துக்கு வெளிநாட்டிலிருந்து ஏராளமான பயணிகள் வருகிறார்கள். அவர்களுக்கு எபோலா வைரசால் பாதிக்க இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆப்பிரிக்க நாட்டில் இருந்து வரும் பயணிகள் வந்தால் அவர்களுக்கு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது. இவர் அவர்கள் கூறினார்கள்.