தமிழகத்தில் நீட் தேர்வுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீட் மறு தேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறவுள்ளது.இதையடுத்து மறு தேர்வுக்கான குறுகிய கால பயிற்சியை பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நீட் தேர்வில் பங்கேற்கவுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை தயார்ப்படுத்தும் நோக்கில் மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் ஜூன் 20-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.இந்த முகாமில் மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராகும் வகையில் பாடவாரியாகப் பயிற்சிகள், மாதிரித் தேர்வுகள் மற்றும் கல்வியியல் நிபுணர்களின் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன.
இதில் மாணவ-மாணவிகள் பங்கேற்பதை தலைமை ஆசிரியர்கள் வாயிலாக உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







