காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட புகாருக்குள்ளான வாக்குப்பதிவு இயந்திரங்கள்

சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது புகாருக்​குள்​ளான வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் காப்​பறை​யில் பாது​காப்​பாக வைக்​கப்​படும் என தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை: தமிழகத்​தில் சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தலுக்​கான வாக்கு எண்​ணிக்கை கடந்த மே 4-ம் தேதி 62 வாக்கு எண்​ணும் மையங்​களில் வெற்​றிகர​மாக நிறைவடைந்​துள்​ளது. தேர்​தலில் போட்​டி​யிட்ட வேட்​பாளர்​கள், தேர்​தல் முகவர்​கள் மற்​றும் வாக்கு எண்​ணுகை முகவர்​களின் முன்​னிலை​யில் வாக்கு எண்​ணிக்கை நடை​பெற்​றுள்​ளது. வாக்கு எண்​ணும் நடை​முறை​யின்​போது வேட்​பாளர்​களும், தேர்​தல் முகவர்​களும் இருந்​தனர். வாக்​கு​கள் எண்​ணப்​பட்ட பின்​னர், சம்​பந்​தப்​பட்ட தேர்​தல் நடத்​தும் அலு​வல​ரால் முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. வாக்கு எண்​ணிக்கை நிறைவடைந்த பின்​னர், வேட்​பாளர்​களின் பிர​தி​நி​தி​களின் முன்​னிலை​யில், கண்​காணிப்​பு கேமரா மற்​றும் பாது​காப்பு கண்​காணிப்​பின்​கீழ், வாக்​காளர்​ தான் செலுத்​திய வாக்​கினை சரி​பார்க்​கும் கருவி​களி​லிருந்து அவற்​றின் சீட்​டு​கள் வெளியே எடுக்​கப்​பட்​டு, சட்​டப்​படியான ஆவணங்​கள் வைக்​கப்​பட்​டுள்ள காப்​பறை​யில் கருப்பு நிற உறை​களுக்​குள் பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டுள்​ளன. மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களை வேட்​பாளர்​கள், அவர்​களின் பிர​தி​நி​தி​கள் முன்​னிலை​யில் காப்​பறை​யில் பாது​காப்​பாக வைப்​ப​தற்கு முன்​னர், வேட்​பாளர்​கள், அவர்​களின் பிர​தி​நி​தி​கள் முன்​னிலை​யில் மூடி முத்​திரை​யிடப்​பட்​டுள்​ளன.

தேர்​தல் புகார் மனுக்​களின் பட்​டியலை சம்​பந்​தப்​பட்ட உயர் நீதி​மன்​றம் இறுதி செய்​யும் வரை, இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தால் வரையறுக்​கப்​பட்ட பாது​காப்பு நெறி​முறை​யின்​படி, காப்​பறை​யில் மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் பாது​காப்​பாக வைக்​கப்​படும். தேர்​தல் புகார் மனு குறித்த நேர்​வில், தேர்​தல் புகார் மனு இறு​தி​யாக தீர்வுசெய்​யப்​படும் வரை​யில் மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் காப்​பறை​யில் தொடர்ந்து வைக்​கப்​பட்​டிருக்​கும். இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்​.