போதை பொருள் விற்றால் சொத்துக்கள், வங்கி கணக்கு முடக்கப்படும்

மிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், இளைஞர்களைச் சீரழிவில் இருந்து பாதுகாக்கவும் மாநில காவல்துறை மற்றும் அரசு தற்போது மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இனி யாராவது சட்டவிரோதமாகப் போதைப் பொருட்களை விற்றாலோ அல்லது பதுக்கி வைத்திருந்தாலோ, அவர்களின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள், குறிப்பாக அவர்கள் வசிக்கும் வீடு அல்லது வணிக வளாகங்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்படும் வருமானத்தில் வாங்கப்பட்ட சொத்துக்களைக் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போதைப் பொருள் வழக்குகளில் தொடர்புடையவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவதோடு, அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு சட்டப்படி சீல் வைக்கப்படும்.போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு” என்ற இலக்கை அடைய, இத்தகைய கடுமையான தண்டனைகள் அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த அதிரடி சட்ட நடவடிக்கை காரணமாகப் போதைப் பொருள் வியாபாரிகள் தற்போது கடும் அச்சத்தில் உள்ளனர்.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் இது போன்ற சட்டவிரோத செயல்கள் நடந்தால் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அரசின் இந்த அதிரடி முடிவு போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.