கோவை : பி.எஸ்.என்.எல். கேபிள் பதிக்கும் பணி நடப்பதால் கோவை அவினாசி ரோடு மேம்பாலத்தில் இன்று முதல் இரவில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகர் பகுதியில் அவிநாசி ரோட்டில் உள்ள ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பி. எஸ். என். எல். நிறுவனத்தின் “ஆப்டிக்கல் பைபர் கேபிள் ” பதிக்கும்பணி இன்று முதல் வருகிற 18-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது .எனவே பாதுகாப்பு கருதி இந்த மேம்பாலத்தில் இன்று முதல் வருகிற 18–ந் தேதி வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. இதற்கு வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் . இந்த அறிவிப்பை மீறி இரவு நேரத்தில் மேம்பாலத்தின் மீது வாகனங்களில் செல்ல முயற்சிக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








