கொடைக்கானலில் முதல்வர்!

​கொடைக்​கானல் வந்​துள்ள முதல்​வர் ஸ்டா​லின் தனது குடும்​பத்​தினருடன் நேற்று காலை நட்​சத்​திர ஏரியைச் சுற்றி நடைப்​ப​யிற்சி மேற்​கொண்​டார்.அவருடன் செல்ஃபி எடுத்து சுற்​றுலாப் பயணி​கள், பொது​மக்​கள் மகிழ்ந்​தனர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு முடிவடைந்​துள்ள நிலை​யில், கொடைக்​கானலில் 5 நாட்​கள் தங்கி ஓய்​வெடுப்​ப​தற்​காக குடும்​பத்​தினருடன் முதல்​வர் மு.க. ஸ்​டா​லின் நேற்று முன்​தினம் வந்​தார். வழிநெடு​கிலும் தொண்​டர்​கள், பொது​மக்​கள் உற்​சாகத்​துடன் முதல்​வரை வரவேற்​றனர்.கொடைக்​கானல் பாம்​பார்​புரம் பகு​தி​யில் உள்ள தனி​யார் விடு​தி​யில் குடும்​பத்​தினருடன் முதல்​வர் தங்​கி​யுள்​ளார். நேற்று முன்​தினம் மாலை அமைச்​சர்​கள் ஐ.பெரிய​சாமி, அர.சக்​கர​பாணி ஆகியோர் முதல்​வரை சந்​தித்துப் பேசினர்.

முதல்​வர் வரு​கை​யையொட்டி கொடைக்கானலில் ஏராள​மான போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். இந்​நிலை​யில் நேற்று காலை மனைவி துர்கா மற்​றும் குடும்​பத்​ தினருடன், கொடைக்​கானல் நட்​சத்​திர ஏரி பகு​தி​யில் இயற்​கைக் காட்​சிகளை ரசித்​த​படி முதல்​வர் ஸ்டா​லின் நடைப்​ப​யிற்சி மேற்​கொண்​டார்.அப்​போது, பொது​மக்​கள், சுற்​றுலாப் பயணி​களிடம் முதல்​வர் நலம் விசா​ரித்​தார். அவருடன் பலர் கைக்​குலுக்​கி, ‘செல்ஃபி’ எடுத்​து மகிழ்ந்தனர். ஏரிப் பகு​தி​யில் சுத்​தம் செய்​யும் பணி​யில் ஈடு​பட்ட தூய்​மைப் பணி​யாளர்​களிடம் கலந்​துரை​யாடிய முதல்​வர், அவர்​களிடம் குறை​களைக் கேட்​டறிந்​தார்.

ஒரு மணி நேரம் நடைப்​ப​யிற்​சிக்​குப் பிறகு முதல்​வர் மீண்​டும் தங்​கும் விடு​திக்கு திரும்​பி​னார். நேற்று முழு​வதும் அறை​யில் தங்கி ஓய்​வெடுத்​தார். அப்​போது, அவரை அமைச்​சர் சேகர்​பாபு, தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை ஆகியோ​ரும் சந்​தித்து ஆலோ​சனை நடத்​தினர்.இதற்​கிடையே கொடைக்​கானல் குறிஞ்​சி​யாண்​ட​வர் கோயி​லில் முதல்​வர் ஸ்டா​லினின் மனைவி துர்கா தனது குடும்​பத்​தினருடன் சுவாமி தரிசனம் செய்​தார். அப்​போது, முதல்​வர் உட்பட குடும்​பத்​தினர் அனை​வரின் பெயரிலும் அர்ச்​சனை செய்து வழிபட்​டார்.

அவருக்கு கோயில் நிர்​வாகம் சார்​பில் முரு​கன் படம், பிர​சாதம் வழங்​கப்​பட்​டது. கோயிலுக்கு வந்​திருந்த பக்​தர்​கள், சுற்​றுலாப் பயணி​கள் துர்கா ஸ்டா​லினுடன் செல்போனில் ‘செல்ஃபி’ எடுத்​துக் கொண்​டனர்.இதனிடையே அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு தனது குடும்​பத்​தினருடன் பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயி​லில் நேற்று சுவாமி தரிசனம் செய்​தார். போகர் சந்​நி​தி, கைலாச​நாதர், ஆனந்த விநாயகர் சந்​நி​தி​யில் வழிபட்​டார்.

பின்​னர், கிரி வீதி​யில் உள்ள வன துர்க்கை அம்​மன், மகிஷாசுரமர்த்​தினி அம்​மன் கோயில்​களில் தரிசனம் செய்​தார்.அதன் பின்பு கொடைக்​கானலுக்கு குடும்​பத்​துடன் காரில் புறப்​பட்​டுச் சென்​றார். முன்​ன​தாக செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறும்​போது, மே 4-ம் தேதி வாக்கு எண்​ணிக்​கைக்​குப் பிறகு ஸ்டா​லின் என்ற பெயர்​தான்​ ஆளுநர்​ மாளி​கை​யில்​ மீண்​டும்​ ஒலிக்​கும்​ என்​றார்​.