9000 கோடி பணம்… மிகவும் அழகான பொண்ணு வேணும்” என கேட்ட ராணுவ தளபதி

ப்பிரிக்க நாடான உகாண்டாவின் ராணுவ தளபதி முஹூசி கெய்னெருகாபா துருக்கி நாட்டுக்கு விடுத்துள்ள அதிரடி மிரட்டல் தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.

தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “துருக்கி அரசு எங்களுக்கு ஒரு பில்லியன் டாலர் (சுமார் ₹9,000 கோடி) பணம் தர வேண்டும்; அதோடு துருக்கியின் மிக அழகான பெண்ணை எனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும்” என இரண்டு விசித்திரமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

​சோமாலியாவில் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக உகாண்டா ராணுவம் போராடி வரும் நிலையில், அங்கு சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் அமைத்து துருக்கி லாபம் சம்பாதிப்பதாகவும், அதற்கு கைமாறாக இந்தத் தொகையைத் தர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.இன்னும் 30 நாட்களுக்குள் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், உகாண்டாவில் உள்ள துருக்கி தூதரகம் மூடப்படும் என்றும், அந்நாட்டு விமானங்கள் உகாண்டா வான்பரப்பில் பறக்கத் தடை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். உகாண்டா அதிபரின் மகனான முஹூசி, ஏற்கனவே இது போன்ற சர்ச்சைக்குரிய பதிவுகளுக்குப் பெயர் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.