இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் ஏற்கனவே ஒரு மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர் மீது உள்ளதாக கூறப்டுகிறது. இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு சென்றிருந்த நிலையில் காவலதுறையினர் அவரை கைது செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.குற்றவாளியை கைது செய்தது குறித்து குறித்து செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி எஸ்.பி மதன் விளக்கமளித்துள்ளார்.
உதாரணமாக சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி இல்லை என்றாலும், சம்பவம் நடந்த இடத்தை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள 98 சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தோம். 2540 செல்போன் எண்கள் ஆய்வு செய்தோம். மேலும் ஏற்கனவே குற்றப் பின்னணி கொண்டவர்களையும் விசாரிக்க தனி குழு அமைக்கப்பட்டது. இந்த அனைத்து குழுவும் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த நபரை நாங்கள் கைது செய்திருக்கிறோம் என்றார்.









