கோவை கலெக்டர் அலுவலகத்தில் திருமண மண்டப உரிமையாளர்கள் பேனர் பிளக்ஸ் அச்சகங்கள் உரிமையாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பவன் குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் மாவட்டத்தில் உள்ள அச்சக உரிமையாளர்கள் . தாங்கள் அச்சடிக்கும் நோட்டீஸ் பேனர்களில் தங்களது அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி அச்சிட வேண்டும். வேட்பாளர் விளம்பரத்திற்கு அரசிடம் அனுமதி பெற்றுள்ளாரா? என்பதை உறுதி செய்ய வேண்டும். திருமண மண்டப உரிமையாளர்கள் மண்டபத்தை பணம் மற்றும் இலவச பொருட்கள் வழங்கிட பயன்படுத்துவதை அனுமதிக்க கூடாது. மேலும் வேட்பாளர்கள் மண்டபத்திற்கு செலுத்திய வாடகை தொகை விவரத்தை தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். திருமணம் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் போது அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது இவ்வாறு அவர் கூறினார்.
திருமண மண்டபங்களில் அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்ய கூடாது!







