திடீர் மழையால் குளிர்ந்த கோவை!

கோவையில் நேற்று மாலை திடீரென்று மழை பெய்தது .இதன் காரணமாக மாநகர சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அவிநாசி ரோடு மேம்பாலம், வடகோவை மேம்பாலம் கீழ்பகுதி, மற்றும் ரயில்வே சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன.மேலும் சாய்பாபா காலனி சாலையில் மேம்பால பணிகளாலும் திடீர் மழையாலும் சாலை சேரும் ,சகதியுமாகி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதேபோல் அவினாசி ரோடு மேம்பாலம், புரூக்பீல்டு சாலை, ரயில் நிலைய சாலை வடகோவை, மில் ரோடு உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ங்கள் மெதுவாக ஊர்ந்தபடி சென்றன.பள்ளி – கல்லூரிகளை விட்டு சென்றவர்கள், அலுவலகம் முடிந்து வீட்டுக்கு சென்றவர்களும் போக்குவரத்து நெரிசலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தபோலீசார் பல இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தாலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் அதனை சமாளிக்க முடியாமல் திணறினார்கள். தெற்கு தாலூகா அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்ததால் செஞ்சிலுவைசங்கம் அருகே வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. கே . ஜி. மருத்துவமனை ரோடு இரு வழி போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.