முட்டை விலை கடும் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழுவின் விலை நிர்ணயக்குழு கூட்டத்தில், முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு முட்டை விலை 645 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.நாமக்கல் மண்டல கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவே அதிகபட்ச விலையாகும். இதற்கு முன்பு கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி ஒரு முட்டையின் விலை 640 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை கடந்த ஜனவரி 3ம் தேதி வரை இருந்தது. அதற்கு பின்பு தற்போது தான் முட்டை விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.