மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் மாதம் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி அவர் இந்தத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளார். அதாவது அவர் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள நந்திகிராம் தொகுதியிலும், முதல்வர் மம்தா பானர்ஜியின் கோட்டையாகக் கருதப்படும் கொல்கத்தாவின் பவானிபூர் தொகுதியிலும் களமிறக்கப்பட்டுள்ளார். சுவேந்து அதிகாரி தொடக்கத்தில் திரிணாமுல் காங்கிரஸில் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்தார். இருப்பினும் கட்சிக்குள் தனக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற அதிருப்தி காரணமாக, 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைந்தார்.இதனையடுத்து 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து சுவேந்து நேரடியாகப் போட்டியிட்டார். இப்போட்டியில் 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். இருப்பினும், மம்தா பானர்ஜி பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அதே சமயம் மேற்கு வங்க தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..





