கோவையில் தேர்தல் விதி மீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேலும் பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் கூறியதாவது:- தொகுதிக்கு 9 குழுக்கள் விதம் பறக்கும் படை நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பில் ஈடுபடும். பொதுமக்கள் ரூ 50ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றால் பணம் பறிமுதல் செய்யப்படும். அரசியல் கட்சிகள் வேட்பாளர்களால் செய்யப்படும் செலவினங்களை கண்காணிக்க ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு வீடியோ குழு என 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் இல்லாமல் கைப்பற்றப்படும் பொருட்கள் பணத்தை விடுவிப்பதற்காக கூடுதல் கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகை தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்படும் பணம், பரிசுப் பொருட்களின் உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களை காட்டி விசாரணைக்கு பிறகு பெற்றுக் கொள்ளலாம் .தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சி. விஜில் என்ற செயலி ம மூலமாகவும் புகார் அளிக்கலாம் .புகார் பெற்ற 100 நிமிடங்களில் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.








